மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்

தமிழ் ​செய்திகள் இன்று


மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில், மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை மற்றும் யோசனைகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

அது தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து கடிதம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை புத்தசாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தனவின் ஊடாக மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலமை மிகவும் மோசம்; சர்வதேசத்தில் ஏற்பட்ட நிலை