அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை

தமிழ் ​செய்திகள் இன்று


அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை

சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முடிவடைந்து செல்வதால் சம்பளம் வழங்குவதற்கும் இயலாத நிலை எதிர்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரித்துச் செல்லும் நிலையில், சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முடிவடைந்து செல்வதாகவும், இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதுகூட முடியாத நிலை எதிர்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்து அனைத்துக்குமான நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு சில நாட்களே ஆகின்றன. இந்நிலையில் ஆண்டின் கடைசி மாதங்களை எப்படி கொண்டு செல்வது என்பது பிரச்சினையாக உள்ளது.

இதனால் மற்றொரு வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்” எனவும் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.