இன்று வௌியிடப்பட்ட இரண்டு விஷேட வர்த்தமானி அறிவித்தல்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


இன்று வௌியிடப்பட்ட இரண்டு விஷேட வர்த்தமானி அறிவித்தல்கள்

இன்று வௌியிடப்பட்ட இரண்டு விஷேட வர்த்தமானி அறிவித்தல்கள்

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 17 அமைச்சரவை அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், 21 புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர்.

இந்நிலையில், புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், தற்பொழுதே அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியானது