இன்று பூரண ஹர்த்தால் – அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையா?

தமிழ் ​செய்திகள் இன்று


இன்று பூரண ஹர்த்தால் – அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையா?

இன்று பூரண ஹர்த்தால் – அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லையா?

இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம் வழங்கப்படமாட்டாது என சமூகவலைத்தளங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் செய்தியொன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், குறித்த அறிவிப்பு பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கமொன்றை வழங்கியுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில், பொது நிர்வாக முடக்கல் போராட்டம் (இன்று பூரண ஹர்த்தால்) முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள், சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.

இந்த பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு, 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், தொடருந்து, பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை