புத்தர் சிலை உடைத்தவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை

தமிழ் ​செய்திகள் இன்று


புத்தர் சிலை உடைத்தவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை

புத்தர் சிலை உடைத்தவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களையும், குற்றமற்றவர்களாகக் கருதி விடுவிக்க மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன். மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றமற்றவர்களாகக் கருதி விடுவிக்கப்படும் 14 சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறியப்படுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், அவர்களை விடுவிக்க மாவனெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவனல்லை புத்தர் சிலை மீது தாக்குதல்; STF பாதுகாப்பு

மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் சிக்கினார்