மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேச்சைக் குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, இன்று (07) அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரு அவநம்பிக்கை பிரேரணைகளும் கடந்த 3ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.