அலரி மாளிகை அருகில் உச்சகட்ட பதற்றம் – கரும்புகை மூட்டம்

அலர மாளிகை அருகில் உச்சகட்ட பதற்றம் - கரும்புகை மூட்டம்
image 2bb6b4989f

அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனாகோகம“ மீதும் கூடாரங்களின் மீதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களை பிய்த்து எறிந்து, தீ மூட்டி கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி எங்கும் கரும்புகையால் மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களை காண்பித்துள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இதேவேளை காலி முகத்திடல் நோக்கி விரைந்துள்ள அரச ஆதரவாளர்கள் கலக செயல்களில் ஈடுபட்டுவருவதுடன், காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை தகர்த்தெறிந்து வருவதாக எமது நிருபர் தெரிவித்தார்.

இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்