பயங்கர கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்

பயங்கர கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் மரணம் andrew symonds car accident
andrew symonds 780x405

அவுஸ்திரேலியா, குயின்ஸ்லேண்ட், டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர்.

அவுஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் 5,088 ஓட்டங்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குயின்ஸ்லேண்ட் பொலிஸார் கூறுகையில், சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது.

காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். அவரை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அதில் பலனில்லை என தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில் முன்னாள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்