முதல் நாளிலேயே தோல்வியடைந்த பிரதமர் ரணிலின் திட்டம்

முதல் நாளிலேயே தோல்வியடைந்த ரணிலின் திட்டம்
ranil wikramasinghe

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.

இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.

எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது. இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.

பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதமர் அமைதியாக இருந்ததை அவதானிக்க முடிந்தது

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்