அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நடவடிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நடவடிக்கை

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நடவடிக்கை

அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சாதகமான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி சாதகமான பதிலை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் அக்கட்சியியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஹரின் பெர்ணான்டோவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு