அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்

அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு 03 மணிக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா? இதோ விளக்கம்