அதிர்ச்சி செய்தி – பண்டாரகம அட்டலுகம சிறுமி ஆயிசா சடலமாக மீட்பு

தமிழ் ​செய்திகள் இன்று


அதிர்ச்சி செய்தி – பண்டாரகம அட்டலுகம சிறுமி ஆயிசா சடலமாக மீட்பு

அதிர்ச்சி செய்தி – பண்டாரகம அட்டலுகம சிறுமி ஆயிசா சடலமாக மீட்பு

பண்டாரகம அட்டலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி பாத்திமா ஆயிசா சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலக் காணியில் இருந்து சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிறுமி பாத்திமா ஆயிசா, புறக்கோட்டை பகுதியில் உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கமைய, குறித்த சிறுமியைத் தேடுவதற்காக, சில காவல்துறை குழுக்கள், அந்தப் பகுதிக்கு சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போனதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், காணாமல்போன சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் உட்பட 20 பேரிடம், வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சிறுமி விற்பனை நிலையமொன்றிலிருந்து வெளியே செல்லும் போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்ந்து தொடர்பாக காவல்துறையினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சி.சி.ரீ.வி. காணொளிகள் மூலம் பெறப்பட்ட தகவலுக்கமைய குறித்த சிற்றூர்ந்தின் இலக்கத்தை அடையாளங்கண்ட காவல்துறையினர் அதன் உரிமையாளரின் வதிவிடமான பிலியந்தலை பிரதேசத்திற்கு சென்று அவரிடம் வாக்குமூம் பதிவு செய்தனர்.

எவ்வாறாயினும் இன்று குறித்த சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன சிறுமி ஆயிசா; பொலிஸார் தீவிர விசாரணை