கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான அறிவிப்பு வௌியானது

கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை
petrol price

கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளைய தினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை ட்விட்டர் பதிவொன்றில் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

37,391 மெற்றிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 6,142 மெற்றிக் டன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 2,437 மெற்றிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக விடத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்ப காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 

எரிபொருள் பெற காத்திருக்கும் மக்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்