செல்லப்பிராணி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


செல்லப்பிராணி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

செல்லப்பிராணி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு காரணமாக, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அளவுக்கதிகமாக கொஞ்சி, அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளுமாறு, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு ஓரளவு சீராவதற்கு இரண்டு மாதங்கள் செல்லும் . எனவே வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக குறித்த செல்லப்பிராணிகளுடன் அதிகமாக விளையாடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானமான இருக்க வேண்டும். நாய்கள், பூனைகள் என்பவற்றுடன் அளவுக்கதிகமாக கொஞ்சுவதால் அவை கடிக்கவும் நகங்களால் பிராண்டவும் செய்கின்றன.

எனவே இவ்வாறு நாய்கள், பூனைகளால் ஏற்படுத்தப்படும் காயங்களுக்கான மருந்துகளைப் பெறுவதில் சிரமம் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.