அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம்; உலக நாடுகளுக்கான அறிவிப்பு – நாளை முதல் அமுல்

அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம்; உலக நாடுகளுக்கான அறிவிப்பு - நாளை முதல் அமுல்

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

நாளை முதல் இவ்வாறு கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு,கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற சான்றிதழை கொண்டிருப்பது அவசியமற்றது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்