திருமணம் முடிந்த கையோடு புதிய சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்ததும் சர்ச்சை

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் நேற்று முன்தினம் திருமணம் செய்தவுடன் நேற்று அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசித்த பின் கோவிலுக்கு வெளியே விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர். அப்போது நயன் மற்றும் விக்னேஷ் சிவன் காலணி அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

காலணி அணிய தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருவரும் காலணி அணிந்திருந்ததால் இதுகுறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தங்களது செயலுக்காக தேவஸ்தான அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் திருமணம் முடிந்த மறுநாள் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்ததாகவும் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் போட்டோ ஷாட் எடுக்கும் போது அவசரம் காரணமாக நானும் நயன்தாராவும் காலனி அணிந்திருந்ததை உணர வில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கடவுளுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சினிமா செய்திகள்

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்