கொழும்பு பொரிய பள்ளிவாசல் கடைத்தொகுதி – நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள குத்தகை்காரர்

தமிழ் ​செய்திகள் இன்று


கொழும்பு பொரிய பள்ளிவாசல் கடைத்தொகுதி – நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள குத்தகை்காரர்

கொழும்பு பொரிய பள்ளிவாசல் கடைத்தொகுதி – நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள குத்தகை்காரர்

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு சொந்தமான சுமார் 250 கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய புறக்கோட்டை கெய்சர் வீதியிலுள்ள ‘அத்தர் மஹால்’ கட்டிடத்தை 9 வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டவர் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தொடர்ந்து கட்டிடத்தை மூடிவிடாது கொழும்பு நடாத்தி வருவதாக பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் விடிவெள்ளிக்குத் தெரிவித்துள்ளது.

அத்தர் மஹாலை 9 வருட குத்தகைக்கு பள்ளிவாசல் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர் 2016.12.25ஆம் தேதி ஒப்பந்த கால எல்லை காலாவதியாகியும் கட்டிடத்தை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்காது சிறிய தொகையே வாடகைக்கு வந்த நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் குத்தகைக்கு பெற்றுக்கொண்டவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறிப்பிட்ட DLM/ 00015/19 ஆம் இலக்க வழக்கு விசாரணைகள் முடிவுறும் வரை அத்தர் மஹால் கடைத்தொகுதியை மூடிவிடும் படி பிரதிவாதியான குத்தகைக்காரருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றத்தின் மேலதிக நீதிவான் ஆர்.எம்.ஒகஸ்டா அத்தபத்து 2022.05.25 ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி பிரதிவாதியான குத்தகைக்காரர் அத்தர் மஹாலை தொடர்ந்து திறந்து செயற்படுத்தி வருவதாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கிறது.

வர்த்தக மையமொன்றின் மத்தியில் அமைந்துள்ள இக்கடைத்தொகுதிக்கு சிறிய தொகையே பிரதிவாதியால் செலுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.

பள்ளிவாசலுக்குச் சொந்தமான இவ்வாறான சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலமே முஸ்லிம் சமூகத்துக்குப் பலதரப்பட்ட சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதர் மஹால் 7 மாடியுடன் கூடிய சுமார் 250 கடைகளை உள்ளடக்கியது. குறிப்பிட்ட இந்தக் கட்டிடம் கொழும்பு பெரிய பள்ளிவாசலால் கொள்வனவு செய்யப்பட்டதாகும்.

1980 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கு (ஸ்டேடியம்) நிர்மாணிப்பதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாளிகாவத்தை மையவாடிக்குச் சொந்தமான 28 ஏக்கர் காணியை சுவீகரிப்புச் செய்தார்.

அதற்கான நஷ்டஈடு வழங்கப்பட்டது. இந்த நஷ்டஈட்டு நிதியின் மூலமே இந்தக் கட்டிடம் அன்று கொள்வனவு செய்யப்பட்டது. அன்று இக்கட்டிடம் ஒரு ஹோட்டலாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தர் மஹாலை 2008.02.01 ஆம் தேதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் 9 வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர், கடைகளை வாடகைக்கு வழங்கிய நிலையில் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சிறிய தொகையையே வாடகைப்பணமாக செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. எனினும் குத்தகைக்கு பெற்றுக்கொண்டவர் கட்டிடத்தை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் மீள ஒப்படைக்காது தொடர்ந்து செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்பு சொத்துக்கள் மூலம் பெறப்பட வேண்டிய பெருமளவு வருமானம் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் சமூக நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டியதாகும்.

ஆனால் இச்சொத்துக்கள் ஒரு சிலரால் நியாயமற்ற முறையில் அ-னுபவிக்கப்படுகிறது. பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு சிறிய தொகையே தொடர்ந்து பல தசாப்த காலமாக செலுத்தப்பட்டு வருகிறது.

இத்தோடு சில சொத்துக்கள் சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல் – விடிவௌ்ளி