பெருந்தொகையான அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற 03 பெண்களுக்கு எற்பட்ட நிலை

தமிழ் ​செய்திகள் இன்று

பெருந்தொகையான அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற 03 பெண்களுக்கு எற்பட்ட நிலை

பெருந்தொகையான அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற 03 பெண்களுக்கு எற்பட்ட நிலை

சென்னையிலிருந்து இலங்கைக்கு பயணிக்க இருந்த 3 பெண்களிடம் சுமார் 34 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான அமெரிக்க டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து நேற்று கொழும்புக்கு புறப்பட இருந்த விமானத்தில், திருச்சி மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த குறித்த மூவரும் பயணிக்க இருந்தனர்.

இந்த நிலையில், அவர்களது பயணப் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றிலிருந்து, 34 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான அமெரிக்க டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களது பயணத்தை இரத்து செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.