மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்

மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்

எதிர்வரும் 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பயணிகள் பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கு இன்று முதல் 24 மணிநேரமும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருளை வழங்குமாறும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்