கூட்டத்தின் நடுவில் திடீரென எழுந்து சென்ற ரணில் – ஜனாதிபதி கூறிய விடயம்

கூட்டத்தின் நடுவில் திடீரென எழுந்து சென்ற ரணில் - ஜனாதிபதி கூறிய விடயம்

பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க திடீரென எழுந்து சென்றமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது ரணில் திடீரென எழுந்து சென்றுள்ளார்.

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காகவே பிரதமர் அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களை சந்திப்பதற்கு பிரதமர் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதமர் எப்போதுமே கூட்டங்களுக்கு இடையில் எழுந்து செல்வதாகவும், பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்