எனது மார்பகங்களுக்காக நான் பெருமையடைகிறேன்: ஹிருணிகா பிரேமச்சந்திர – ரணில் விடுத்த கோரிக்கை

எனது மார்பகங்களுக்காக நான் பெருமையடைகிறேன்: ஹிருணிகா பிரேமச்சந்திர - ரணில் விடுத்த கோரிக்கை

“எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமையடைகிறேன். 3 அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்பால் ஊட்டியுள்ளேன்” என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி, கொழும்பு 7 பிளவர் வீதியிலுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் நேற்று ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது, பொலிஸாருடனான மோதலின்போது அவரின் மார்பகம் வெளிப்பட்டமை தொடர்பில் சிலர் கிண்டலடித்ததையடுத்தே ஹிருணிகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேஸ்புக்கில் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்டுள்ள பதிவொன்றில்

“நான் என் மார்பகங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்! மூன்று அழகான குழந்தைகளுக்கு நான் தாய்ப்பாலூட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து , அவர்களை சௌகரியப்படுத்தினேன். என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்.

“(பொலிஸாருடனான மோதலின் காரணமாக) எனது வெளிப்பட்ட மார்பகங்களை கேலி செய்பவர்களும் குழந்தைகளாக இருந்தபோது அவர்களின் தாய்மார்களின் முலைக்காம்புகளை உறிஞ்சியிருப்பார்கள் என நம்புகிறேன். எவ்வாறெனினும் என் மார்பகங்களைப் பற்றி நீங்கள், பேசும்போது, மீம்ஸ் உருவாக்கும்போது, சிரிக்கும்போது, வரிசையில் இன்னொரு குடிமகன் இறந்திருந்திருந்தார்… உங்களுக்குத் தெரியும்!” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் தாய்மையை களங்கப்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிக்காவிற்கு இழிவுபடுத்தக் கூடிய வகையிலான புகைப்படங்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.

நாகரீகமான சமூகம் தாய்மையை இழிவுபடுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்