எரிபொருள் பெற தேவை உள்ளவரா? அமைச்சர் வௌியிட்ட அதிர்ச்சி செய்தி

தமிழ் ​செய்திகள் இன்று


எரிபொருள் பெற தேவை உள்ளவரா? அமைச்சர் வௌியிட்ட அதிர்ச்சி செய்தி

எரிபொருள் பெற தேவை உள்ளவரா? அமைச்சர் வௌியிட்ட அதிர்ச்சி செய்தி

எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

40,000 மெற்றிக் டன் எரிபொருளுடன் நாட்டுக்கு வரவிருந்த கப்பல் மீளவும் தாமதமாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமக்கு அறிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமை காரணமாக எரிபொருள் தாங்கி வரும் குறித்த கப்பல் நாட்டுக்கு வரும் சரியான திகதியை அறிவிக்க முடியாது எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் முழுவதும் வரையறுக்கப்பட்ட டீசல் மற்றும் பெட்றோல் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

எரிபொருள் வருகைத் திகதியை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அடுத்த மசகு எண்ணெய் தொகுதி வரும் வரை சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் குறிப்பிட்டார்.