எரிபொருள்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன

தமிழ் ​செய்திகள் இன்று


எரிபொருள்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன

எரிபொருள்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாயாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாயாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை அதிகரிப்புக்கு நிகராக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.