வங்கிகளில் உள்ள உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் – இப்படியும் மோசடி நடக்கிறது

தமிழ் ​செய்திகள் இன்று


வங்கிகளில் உள்ள உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் – இப்படியும் மோசடி நடக்கிறது

வங்கிகளில் உள்ள உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் – இப்படியும் மோசடி நடக்கிறது

கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் இருவரை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிறவியிலேயே அங்கவீனமுற்ற தனது மகளுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக 62 இலட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் முடிந்தால் அதற்கு உதவுமாறும் கோரி, குறித்த குழந்தையின் தந்தை முகப்புத்தகத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் படி ஒருவர் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி பண உதவி செய்வதற்காக அவருடைய வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கத்தையும் அனுப்புமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த நபருக்கு வங்கி கணக்கு இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றையும் அனுப்பியுள்ளார்.

குறித்த மோசடியாளர் அந்தத் தரவைப் பயன்படுத்தி க்யூஆர் (QR) குறியீட்டை உருவாக்கி, மேற்கூறிய கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

இதேவேளை ,நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் நபர் ஒருவர், நாய்க்குட்டிகளை விற்பனை செய்வதற்கு முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நபர், அவரிடமிருந்து வங்கிக் கணக்க இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் ,கணக்கு எண்ணைப் பெற்று, அவரது கணக்கில் இருந்து பத்தாயிரம் ரூபாவை பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம்