கட்டார் இலங்கையுடன் கோபமடைந்ததற்கான காரணத்தை கூறிய சஜித்

தமிழ் ​செய்திகள் இன்று


கட்டார் இலங்கையுடன் கோபமடைந்ததற்கான காரணத்தை கூறிய சஜித்

கட்டார் இலங்கையுடன் கோபமடைந்ததற்கான காரணத்தை கூறிய சஜித்

இனவாதத்தை தூண்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஊடாக சமூகத்தினுள் தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் செயற்பட்டனர்.

இவ்வாறான குறுகிய இனவாத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த செயற்பாடுகளால் கத்தார் போன்ற நாடுகளை இவர்கள் கோபமடையச் செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதற்கு முறையான வெளிப்படையான வேலைத்திட்டம் தேவை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

நிலவும் நெருக்கடிமிக்க நிலைமையிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அதன் மூன்றாம் கட்டமாக தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்று (01) வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.