அமைச்சர் ஹரீன் பொ்னாண்டோ அதிரடித் தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


அமைச்சர் ஹரீன் பொ்னாண்டோ அதிரடித் தீர்மானம்

அமைச்சர் ஹரீன் பொ்னாண்டோ அதிரடித் தீர்மானம்

அமைச்சர் ஹரீன் பொ்னாண்டோ பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மேம்பாடு, காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இது தொடர்பாக அவசர ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,

பொதுமக்களின் துன்பங்கள், நெருக்கடிகளைத் தீர்க்க என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கும் வகையிலேயே நான் அமைச்சுப் பதவியொன்றைப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

மற்றபடி எவரையும் பாதுகாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. தற்போதைய நிலையில் பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஊடரங்கு உத்தரவு தொடர்பில் எனது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்து கொள்கின்றேன்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளையும், பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளையும் தீர்க்கும் வகையில் நாம் ஒன்றிணைந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று காலை முதல் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.