மாலைத்தீவுக்கு சென்ற கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை

தமிழ் ​செய்திகள் இன்று


மாலைத்தீவுக்கு சென்ற கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை

மாலைத்தீவுக்கு சென்ற கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை

இன்று அதிகாலை மாலைதீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கோட்டாபயவை கடுமையாக திட்டும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைத்தீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாலைதீவின் தலைநகரான மாலேவை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் சென்றடைந்துள்ளார்.