கோட்டாபய ராஜபக்ஷவை காப்பாற்ற 05 மில்லியன் அமெரிக்க டொலர் டீல்?

தமிழ் ​செய்திகள் இன்று


கோட்டாபய ராஜபக்ஷவை காப்பாற்ற 05 மில்லியன் அமெரிக்க டொலர் டீல்?

கோட்டாபய ராஜபக்ஷவை காப்பாற்ற 05 மில்லியன் அமெரிக்க டொலர் டீல்?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு நேற்று அதிகாலை சென்றிருந்தார்.

பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு மாலைதீவு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றாரா என மாலைதீவு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சவூதி அரேபியா சென்றிருந்த மாலைதீவு ஜனாதிபதி நேற்று இரவு மாலைதீவை சென்றடைந்தார்.

அவர் விமான நிலையத்தில் இருந்து நாட்டை வந்தடைந்த போது மாலைதீவு ஊடகவியலாளர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் அவரால் செல்ல முடியவில்லை என மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் மாலைதீவு ஜனாதிபதியும் சிங்கப்பூர் செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.