Gold in world market – உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை (Gold in world market) இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,719.30 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,750 டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை இன்று இலங்கை 2022
இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கம் விலை இன்று இலங்கை 2022
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,700 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் கடந்த 6ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,250 ரூபாவாகவும், கடந்த 12ஆம் திகதி 162,400 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 153,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும்.
தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க இலாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.
அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.