யாழ்ப்பாண தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்

தமிழ் ​செய்திகள் இன்று


யாழ்ப்பாண தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்

யாழ்ப்பாண தமிழருக்கு கனடாவில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்

ஜீவகுமார் சிவபாதம் எனும் இலங்கை தமிழருக்கு கனடாவில் அதிர்ஷட லாபச்சீட்டின் மூலம் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்குச் சென்று வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை வென்றுள்ளார்.

ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசையே வென்றுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், அந்த பணத்தில் கார் கொள்வனவு செய்துள்ளதுடன் தனது பிள்ளைகளை கல்விக்காக பணத்தை செலவிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜீவகுமார் சிவபாதம் கூறுகையில்,

இது எனது முதல் பெரிய வெற்றி. நான் என் அதிர்ஷட லாபச்சீட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது.

ஆனாலும் நான் அமைதியாகவே இருந்தேன், ஏனென்றால் அது தான் என் இயல்பு.

பரிசு விழுந்தது குறித்து என் மனைவிக்கு முதலில் சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

பரிசு பணத்தை வைத்து புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.