முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வேண்டுமானால் கட்டாயம் செய்ய வேண்டியது

தமிழ் ​செய்திகள் இன்று

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வேண்டுமானால் கட்டாயம் செய்ய வேண்டியது

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வேண்டுமானால் கட்டாயம் செய்ய வேண்டியது

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு, அமைச்சர் காஞ்சன விஜேசேகர முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவு மூலம் அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.