மாலைத்தீவு சபாநாயகர் சகோதரர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது

தமிழ் ​செய்திகள் இன்று


மாலைத்தீவு சபாநாயகர் சகோதரர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது

மாலைத்தீவு சபாநாயகர் சகோதரர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது

மாலைத்தீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரரான அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி தமது சகோதரரைக் கைது செய்துள்ளதாக நஷீத் ட்வீட் செய்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மாலைத்தீவு சபாநாயகர், ஆளும் கூட்டணியில் உள்ள கடும்போக்கு தீவிரவாதிகளை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டதை மாலைத்தீவு காவல்துறை உறுதி செய்துள்ளது.

இதில் நஷீத்தின் சகோதரரை தவிர்ந்த ஏனைய இருவரும் காவல்துறை அதிகாரிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.