நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வௌியிட்ட ஜனாதிபதி ரணில்

தமிழ் ​செய்திகள் இன்று


நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வௌியிட்ட ஜனாதிபதி ரணில்

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வௌியிட்ட ஜனாதிபதி ரணில்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து திவாலான நாட்டை மீட்டெடுக்க உதவும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர் மாதத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு உடன்படிக்கையை எட்ட இலக்கு வைத்திருந்தாலும், தற்போது அது ஒரு மாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு மீட்புப் பொதி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் நகரவில்லை என்று விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதாக இலங்கை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இலங்கை 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும், இதில் 28 பில்லியன் டொலர்கள் 2027 க்குள் செலுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையில் நாணய நெருக்கடி காரணமாக எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயு போன்ற பல முக்கியமான இறக்குமதி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதேவேளை நெருக்கடியை எதிர்கொள்ள பல கட்சி அரசாங்கத்தில் தன்னுடன் இணையுமாறு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் தலைவர்களை குற்றம் சாட்டுவது பிரச்சினையை தீர்க்காது, ஆனால் நாடு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் இன்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.