லிட்ரோ கேஸ் வெற்று சிலிண்டர் விலை அதிகரிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


லிட்ரோ கேஸ் வெற்று சிலிண்டர் விலை அதிகரிப்பு

லிட்ரோ கேஸ் வெற்று சிலிண்டர் விலை அதிகரிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் புதிய வெற்று எரிவாயு கொள்கலன் கொள்வனவின்போது, செலுத்தப்படும் வைப்பு பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 29 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2.3 கிலோகிராமுக்கு 7,000 ரூபாவாகவும், 5 கிலோகிராமுக்கு 11,000 ரூபாவாகவும், 12.5 கிலோகிராமுக்கு 14,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 37.5 கிலோகிராமுக்கான வைப்புப் பணத்தொகை 35,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.