ரணிலின் அழைப்பு – சஜித் அணியின் தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


ரணிலின் அழைப்பு –  சஜித் அணியின் தீர்மானம்

ரணிலின் அழைப்பு – சஜித் அணியின் தீர்மானம்

பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுப்பிய கடிதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நாட்டில் நிலவிவரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை நிவர்த்திசெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டியுள்ளது.

இதனை, கருத்திற்கொண்டு, அவற்றுக்கு தீர்வுகாணும் முகமாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட அடுத்தக்கட்டம் குறித்த கலந்துரையாடலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்பதாக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்றுக்கொண்டுள்ளதாக சஜித் பிரேமதாஸ அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.