பொது மக்களிடம் விஷேட உதவி கேட்கும் பொலிஸார்

தமிழ் ​செய்திகள் இன்று


பொது மக்களிடம் விஷேட உதவி கேட்கும் பொலிஸார்

பொது மக்களிடம் விஷேட உதவி கேட்கும் பொலிஸார்

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 காவல்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு காவல்துறை பொது மக்களின் உதவியை கோரியுள்ளது.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் ஏதும் தெரிந்திருப்பின் அவர்கள் குறித்த விடயங்களை 071-8591735, 071-8592735 071-8591733 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மே மாதம் 10ஆம் திகதி குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்திருந்தார்.

கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அவர் ஓடி தப்ப முயன்றபோதிலும், குறித்த குழுவினர் பின் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

எனினும், தாக்குதல் சம்பவத்திலிருந்து காவல்துறையினர் அவரை மீட்டு பாதுகாப்பாக, அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர்.