தங்குவதற்கு இடம் இன்றி தவிக்கும் கோட்டாபய – அடுத்து என்ன செய்ய போகிறார்?

தமிழ் ​செய்திகள் இன்று


தங்குவதற்கு இடம் இன்றி தவிக்கும் கோட்டாபய – அடுத்து என்ன செய்ய போகிறார்?

தங்குவதற்கு இடம் இன்றி தவிக்கும் கோட்டாபய – அடுத்து என்ன செய்ய போகிறார்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிவடைந்தவுடன் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தான் இன்னமும் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எமது செய்தி பிரிவு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை பிரத்தியேகமாக தொடர்பு கொண்ட போது அவர் இதனை

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவதற்காக தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா நேற்று (10) அறிவித்துள்ளார்.

இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது தற்காலிக தங்குமிடம் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம்.

எந்த அரசியல் நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது, மேலும் இது அவருக்கு தஞ்சம் புகுவதற்கு ஒரு நாட்டைக் கண்டறிய உதவும்” என்று பிரதமர் பிரயுத் கூறினார்.

முன்னதாக தாய்லாந்து ஊடகங்களின்படி. கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து இன்று (11) தாய்லாந்து வரவுள்ளதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் தாய்லாந்தில் இன்னும் ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பதால் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் தெரிவித்தார்.

இந்த விஜயத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும் தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு தங்கும் வசதிகளை செய்து கொடுக்காது எனவும் டொன் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தில் இருந்தபோது அவருடன் இணைந்து செயற்பட்டதால், இந்த விஜயம் கொழும்புடன் முரண்பாடுகளை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதே அவர் தங்குவதற்கான ஒரு நிபந்தனை என்று அமைச்சர் கூறினார்