கோட்டா தாய்லாந்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதி

தமிழ் ​செய்திகள் இன்று


கோட்டா தாய்லாந்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதி

கோட்டா தாய்லாந்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இன்று (11) பேங்கொக் நேரப்படி இரவு 8 மணியளவில் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்ட குறுகிய கால சுற்றுலா அனுமதி காலாவதியானதையடுத்து, கோட்டாபய ராஜபக்க்ஷ சிங்கப்பூர் செலிடர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று மாலை தாய்லாந்துக்குப் புறப்பட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோட்டாபாய ராஜபக்க்ஷவிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருப்பதால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க முடியும் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபாய ராஜபக்க்ஷ தாய்லாந்துக்கு வர அனுமதிக்கப்பட்டார் என்றும், தாய்லாந்தில் தங்கியிக்கும் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் ராஜபக்க்ஷ உறுதியளித்தார் என்றும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா கூறினார்.