மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் – கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் – கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் – கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளின் செயற்பாடுகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான 5 நாட்களில் வழமையான அடிப்படையில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்கள் உள்ள பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிபர்களுக்கான போக்குவரத்து வசதிகளை உறுதி செய்யுமாறு மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.