பண வைப்பு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சியும் நேர்மையும்

தமிழ் ​செய்திகள் இன்று


பண வைப்பு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சியும் நேர்மையும்

பண வைப்பு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சியும் நேர்மையும்

யக்கலமுல்ல பிரதேசத்தில் CDM இயந்திரத்தில் பண வைப்பு செய்ய சென்றவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

எம்.எம்.தஹநாயக்க என்ற நபர் தனது மகனுடன் பணம் வைப்பு செய்ய சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே பண வைப்பு செய்ய சென்ற நபர் அதனை உரிய முறையில் வைப்பு செய்யாமையினால் பணம் இயந்திரத்திலேயே சிக்கியிருந்தது.

இந்த நிலையில் அடுத்தாக பணம் வைப்பு செய்ய சென்ற எம்.எம்.தஹநாயக்க இயந்திரத்தை அழுத்தும் போதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. அவர் அந்த பணத்தை வெளியே எடுத்துவிட்டு தனது பணத்தை வைப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த வங்கி அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் உரிமையாளரிடம் இந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர். மற்றவர்களின் பணம் எங்களுக்கு எதற்கு நம்பிக்கையுடன் செயற்பட்டால் நாமும் வெற்றி பெறலாம் என தஹநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பணத்திற்கு சொந்தமான உரிமையாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன், அந்த நபரின் நேர்மைக்கு பாராட்டியுள்ளார்.

More Tamil news today