டயஸ்போரா மீதான தடையை நீக்குவதில் பிரச்சினையில்லையாம்

தமிழ் ​செய்திகள் இன்று


டயஸ்போரா மீதான தடையை நீக்குவதில் பிரச்சினையில்லையாம்

டயஸ்போரா மீதான தடையை நீக்குவதில் பிரச்சினையில்லையாம்

தமிழ் டயஸ்போரா மீதான தடை அநியாயமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை நீக்குவதில் பிரச்சினை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர்களின் டொலர் முதலீட்டின் அடிப்படையில் தடையை நீக்கம் செய்யப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாம் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்.

நெருக்கடியின் உண்மையான அழுத்தத்தை நாம் இன்னும் அனுபவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

06 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் ஏன்?