பிள்ளையானின் அலுவலகத்தில் கைக்குண்டு மீட்பு

தமிழ் ​செய்திகள் இன்று


பிள்ளையானின் அலுவலகத்தில் கைக்குண்டு மீட்பு

பிள்ளையானின் அலுவலகத்தில் கைக்குண்டு மீட்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்தி செல்லப்படும் அலுவலகத்தின் உள் பக்க கூரையில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இவ்வீட்டை கொள்வனவு செய்தவர் மேற்கூரையை சீர்செய்யச் சென்ற போது இந்த கைக்குண்டுகளை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று அவற்றினை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.