தொழிலதிபரை மிரட்டி 200 கோடி மோசடி குற்றத்தில் பிரபல இலங்கை நடிகை

தமிழ் ​செய்திகள் இன்று


தொழிலதிபரை மிரட்டி 200 கோடி மோசடி குற்றத்தில் பிரபல இலங்கை நடிகை

தொழிலதிபரை மிரட்டி 200 கோடி மோசடி குற்றத்தில் பிரபல இலங்கை நடிகை

பெண்ணொருவரை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (jacqueline fernandez ) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் (இந்தியன் நாணய பெறுமதிபடி) பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மனைவியிடம் பறித்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பொலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து செலவிட்டதும் தெரியவந்தது.

இந்தியாவில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்ட இலங்கை நடிகை

குறிப்பாக பொலிவுட் நடிகை இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அத்துடன், சுகேஷுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில பரிசுப் பொருட்களைப் பெற்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், குதிரை, 15 ஜோடி காதணிகள், 5 ஆடம்பர பை, மிகவும் அதிக விலை மிக்க 4 பூனைக்குட்டிகள் போன்ற பல பரிசுப்பொருட்களை வழங்கினார்.

அத்துடன், ஜாக்குலின் சகோதரிக்கு ரூ.1.50 லட்சம் அமெரிக்க டொலர்களும், ரூ.15 லட்சம் ஜாக்குலின் சகோதரருக்கும் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்தது அமுலாக்கப்பிரிவு விசாரணையில் தெரிய வந்தது.

இதற்காக அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை பல முறை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், (Jacqueline fernandez ) தான் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியதை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

இதனால் அவர் வெளிநாடு செல்ல அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஜாக்குலின் அடிக்கடி தனி விமானத்தில் சென்னை வந்து செல்ல சுகேஷ் பல கோடி ரூபாவை செலவு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களைபணச்சலவை சட்டத்தின் கீழ்முடக்கியுள்ளனர்.

இதில் ஜாக்குலின் பெயரில் வங்கிகளில் இருந்த ரூ.7.12 கோடி மதிப்புள்ள நிலையாக வைப்புகளும் அதில் அடங்கும். அதோடு தொழிலதிபரின் மனைவியிடம் மிரட்டிப் பறித்த பணத்தில் சுகேஷ் ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு கொடுத்திருப்பதாக அமுலாக்கப்பிரிவு கணித்துள்ளது.

சுகேஷ் சிறையில் இருந்து ஒரு ஆண்டு வெளியில் வந்த போது ஜாக்குலின், சுகேஷ் இருவரும் அடிக்கடி சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

டிடிவி தினகரனிடம், இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தருவதாகக்கூறி பல கோடி ரூபாயை சுகேஷ் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இலங்கையரான ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2009 இல் இந்தி திரையுலகில் நடிகையான அறிமுகமானார்.

இந்த வழக்கில் மொத்தம் 8 பேரை அமுலாக்கத்துறை கைது செய்துள்ளது. இவர்களில் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா போல் ஆகியோரும் அடங்குவர்.