ரணிலின் வீடு எரிக்கப்பட்போது சஜித்தின் சகோதரி அங்கு இருந்தது ஏன்?

தமிழ் ​செய்திகள் இன்று


ரணிலின் வீடு எரிக்கப்பட்போது சஜித்தின் சகோதரி அங்கு இருந்தது ஏன்?

ரணிலின் வீடு எரிக்கப்பட்போது சஜித்தின் சகோதரி அங்கு இருந்தது ஏன்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய துலாஞ்சலி பிரேமதாச,

சம்பவம் இடம்பெற்ற போது அப்போதைய பிரதமரின் வீட்டிற்கு அருகில் தான் இருந்ததாகவும், விசாரணைகளுக்கு உதவுவதற்காக வாக்குமூலமொன்றை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே தாம் வந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தமக்கு தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.