260 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஏற்பட்ட நிலை

தமிழ் ​செய்திகள் இன்று


260 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஏற்பட்ட நிலை

260 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஏற்பட்ட நிலை

பலாங்கொடை நகரில் 4 வெள்ளை முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையை விட 260 ரூபாவுக்கு விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். மெனிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும்.

அதன்படி, பலாங்கொடை நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​சந்தையில் இருந்து முட்டைகளை வாங்கி, நான்கு முட்டைகளுக்கு தலா 65 ரூபா வீதம் 260 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையிலேயே அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு முட்டை விற்பனை செய்தமைக்காக பலாங்கொடை பதில் நீதவான் ஏ.எம்.எஸ். மெனிகே ஐந்து இலட்சம் அபராதத் தொகையை நிர்ணயித்தார்.