500 ரூபாவினால் அநியாயமாக பதவியை இழந்த பொலிஸ் அதிகாரி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


500 ரூபாவினால் அநியாயமாக பதவியை இழந்த பொலிஸ் அதிகாரி

நீதிமன்ற வளாகத்தில் வைத்து 500 ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸார் கடமையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் பிரச்சினையில் தடுமாறிக்கொண்டிருந்த போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 500 ரூபா தருமாறும், அந்த வேலையை முடித்துத் தருவதாகவும் நபரிடம் கேட்டுள்ளார்.

பொலிஸாருக்கு பணத்தினை கொடுத்த நபர், பணத்தில் உள்ள இலக்கத்தினை பதிவு செய்து விட்டு, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

நீதிமன்றில் நின்ற அனைத்துப் பொலிஸாரையும் நீதிபதி அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, மன்னார் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் 500 ரூபா பணத்தினை வைத்திருந்துள்ளார்.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்தரன் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததுடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.