51 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா மன்னாரில் மீட்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


51 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா மன்னாரில் மீட்பு

மன்னார் – சிலாபத்துறை கல்லாறு கடற்கரை பகுதியிலிருந்து 51 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் பொதிகளை மன்னார் போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த கேரளா கஞ்சாப் பொதிகள் நேற்று வியாழக்கிழமை (24) மாலை வேளையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையை மேற்கொண்டபோதே இந்த 51 கிலோ 500கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

எனினும் கஞ்சாவை கொண்டு வந்தவர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை எனவும், கஞ்சாப் பொதிகளை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.