7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முற்பகல் 11.40 தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

பதுளை, மொனராகலை, குருநாகல், இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

(அத தெரண)