முதலிரவில் மனைவியை கொலை செய்த கணவன்; காரணம் இதுதான்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


முதலிரவில் மனைவியை கொலை செய்த கணவன்; காரணம் இதுதான்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது ஜாகோபாபாத் மாவட்டத்தில் குலாந்தர் பக்ஷ் கோகர் ( வயது 28) என்பவருக்கும் கான்ஷாடி லஸ்ரி ( வயது 19 ) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் உறவினர்கள் தான். திருமண விழா உறவினர்கள் புடை சூழ இனிதாக நடைபெற்றது.
புதுமண தம்பதிகள் முதல் இரவுக்காக தனியறைக்கு அனுப்பப்பட்டனர். மறு நாளும் விடிந்தது. காலையில் மணமகள் கட்டிலில் பிணமாக கிடந்தார்.அவர் அணிந்து இருந்த சல்வார் கமீசின் துப்பட்டாவில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது.இதனால் மண வீடு மரண வீடாக மாறியது.
ஆனால் மணமகனை காணவில்லை. இதனால் பெண்ணின் தந்தைக்கு மருமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக பெண் வீட்டார் இது குறித்து போலீசில் புகார் கூறினர். இது குறித்து பெண்ணின் தந்தை கூறும் போது திருமண விழா சிறப்பாக நடந்தது.
ஆனால் ஏன் இவ்வாறு நேர்ந்தது என தெரியவில்லை என கூறினார். பெண் வீட்டார் புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது 4 சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது.
அவர் மிகவும் எதார்த்தமாகத்தான் இருந்தார். அவர்கள் குடும்பத்தை எங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனினும் இவ்வளவு ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என பெண்ணின் சகோதரர் கூறினார்.
செல்போனின் சிக்னல் கொண்டு அவர் மறைந்து இருக்கும் இடத்தை அறிந்து போலீசார் மணமகனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் தான் கொலை செய்ததை ஒப்புகொண்டார்.
தனது மனைவி கன்னித்தன்மையுடன் இல்லை என்பதை கண்டறிந்ததால் கோபம் அடைந்த கோகர் புதுமனைவி லஸ்ரியை சல்வார் கமீசின் துப்பாட்டா கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். இதை தொடர்ந்து அவர்மீது கொலை வழக்குபதிவுசெய்யப்பட்டு உள்ளது.