Aeroflot issue in Sri Lanka – ரஷ்யா- இலங்கை இடையே மோதலா? பிரதமரின் அறிவிப்பு


Aeroflot issue in Sri Lanka – ரஷ்யா- இலங்கை இடையே மோதலா? பிரதமரின் அறிவிப்பு

ரஷ்யா Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை (Aeroflot issue in Sri Lanka) இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை (Aeroflot issue in Sri Lanka) தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தை விரைந்து தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.